Wednesday, July 18, 2012

சித்திர பித்தன்


என்னைகொண்டே என்னைக் கிறுக்கும்
சித்திர பித்தன் நானாவேன்.

தன்னைகொண்டே தன்னை செதுக்கும்
உளி படும் கல்கியும் என் மனமாக.

கட்டிய வேடமும் கிட்டிய மேடையும்
என் உடைகளும் உலகமும் அதுவாக‌

எதற்காய் இட்டேன் இக்கோலம்
என்றே மறந்தேன் இந்நேரம்.

அரிதாரம் இட்டு அனுதினம் நடித்தேன்
பரிகாசம் பேசி எனக்குள் சிரித்தேன்.

அகத்தில் இருக்கும் அழுகையெல்லாம்
அழகாய் மறைத்தேன் அகிலத்திலே.

நகைத்து ரசிக்கும் நல்லாரின்
நாடகக் கோமாளி நானாவேன்
 

Wednesday, June 27, 2012

வளர்ந்ததும் வந்தது அடம்


எந்தன் முதல் நுகர்வு
வெடித்து வீணானது
முறையிட்டு அழுதேன்
தந்தையெனும் நீதிவானிடம்
கிடைத்தது வேறொரு வண்ண பலூன்.
நிலைத்ததா?
அளித்தேன் மேல்முறையீடு
கிடைத்ததோ இனிப்பு மிட்டாய்
விருப்பமும் மாறின‌
கிடைத்ததும் விரும்பின‌
அந்த மனம் எந்த திசை போனதோ?
வளர்ந்ததும் வந்தது அடம்

பசலையில் ஒரு பா




மனம் மயக்கும் மாங்காற்றே
குனம் மாற்றும் இளங்காற்றே
என் ஏற்றவனின் முகம் பார்த்து.
பல திங்கள் கழிந்ததினை-நான்
கனப் பொழுதும் படும் துயரையை
பாங்காக பறைவாயோ?


இளம் பனி புல் சுமக்க‌
அதை உண்ணும் சிறுமானே
அயல் சென்ற என்னவனின்
மலர் கொண்ட செவியினிலே
என் மேனி சுடுவத‌னை
மெலிதாக சொல்வாயோ?

கொற்றவனின் பிரிவு எண்ணி
பொற்றாமரை கயல் இலையில்
என் கணவன் வர கோரி
பண் தமிழில் கவி அமைத்தேன்
மேகம் வழி சேதி விட்டேன்
விரைந்து நீயும் சேர்ப்பாயோ?

இனிதான என் தோழி
தனித்திருக்கும் தனல் உணர்வை
பசலையிலே பண் அமைத்து
பலர் வழியே தூதுவிட்டேன்-நீ
என் கோமகனை வழி பார்த்தால்
கண்டவுடன் சொல்லிவிடு

Tuesday, March 20, 2012

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது. ஆம் இது தான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கின்றது.

இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ்க் கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் "குமரிக்கண்டம்".

ஏழு தெங்கநாடு,ஏழு மதுரைநாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரை நாடு, ஏழு குரும்பனை நாடு என இங்கு நாற்பத்தியொன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது. தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரரின் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்.

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

Saturday, December 10, 2011

தோன்றிடும் எண்ணங்கள்





தோன்றிடும் எண்ணங்கள் தூய்மைகொள் மானிடா-


அன்றேல்


தோன்றலின் தூண்டலால் துன்புறும் மனமது


சேர்ந்திடும் நட்ப்பினை நாற்திசை ஆக்குமே!


ஊரிடும் உறவுகள் உவர்ப்பென மாற்றுமே!


Thursday, September 1, 2011

இதயத்தின் ரணச்சுவடு

உன் கைவிரல் நகத்தினிடை இருப்பது அழுக்கல்ல என் அன்பே
நீ என் மனச்சுவர் கிறும் தருணம் படிந்த உணங்கிய
என் சுரமெனும் ரணமடி
என் சுரமெனும் ரணமடி

Monday, July 25, 2011

காதல் ஒன்றும் பயிரல்ல

தனக்கான ஓர் இதயம் துடிக்காதோ
என்றெண்ணி திசை தேடித்திரியும்
குயிலெனவே ஆலைந்திருந்தேன்
"எனதான என் இதயம் உனதாக்கிகொள்வாயோ?"- என்று
எனை நீயும் வினவும் கனம்
சுகந்தமென ஓர் அனுவும்
மயில் இறகாய் சுரத்தினையே வருடியதே-மறுநொடியே
வருடிய இதயந்தனை வால்கொண்டு வீசிவிட்டாய்
"வினவிய வினாதனை வினையாக கொள்ளாதே
விளையாட்டாய் வினவி விட்டேன்
வினாவினையே மறந்த்துவிடு"
விதைத்து வைத்து காத்திருக்க
காதல் ஒன்றும் பயிரல்ல பேரழகே
ஒரு நொடியை சதக்கூரிட்டு
ஒரு பகுதி போதுமடி எனக்குள் நீ இறங்க.