Wednesday, June 27, 2012

வளர்ந்ததும் வந்தது அடம்


எந்தன் முதல் நுகர்வு
வெடித்து வீணானது
முறையிட்டு அழுதேன்
தந்தையெனும் நீதிவானிடம்
கிடைத்தது வேறொரு வண்ண பலூன்.
நிலைத்ததா?
அளித்தேன் மேல்முறையீடு
கிடைத்ததோ இனிப்பு மிட்டாய்
விருப்பமும் மாறின‌
கிடைத்ததும் விரும்பின‌
அந்த மனம் எந்த திசை போனதோ?
வளர்ந்ததும் வந்தது அடம்

பசலையில் ஒரு பா




மனம் மயக்கும் மாங்காற்றே
குனம் மாற்றும் இளங்காற்றே
என் ஏற்றவனின் முகம் பார்த்து.
பல திங்கள் கழிந்ததினை-நான்
கனப் பொழுதும் படும் துயரையை
பாங்காக பறைவாயோ?


இளம் பனி புல் சுமக்க‌
அதை உண்ணும் சிறுமானே
அயல் சென்ற என்னவனின்
மலர் கொண்ட செவியினிலே
என் மேனி சுடுவத‌னை
மெலிதாக சொல்வாயோ?

கொற்றவனின் பிரிவு எண்ணி
பொற்றாமரை கயல் இலையில்
என் கணவன் வர கோரி
பண் தமிழில் கவி அமைத்தேன்
மேகம் வழி சேதி விட்டேன்
விரைந்து நீயும் சேர்ப்பாயோ?

இனிதான என் தோழி
தனித்திருக்கும் தனல் உணர்வை
பசலையிலே பண் அமைத்து
பலர் வழியே தூதுவிட்டேன்-நீ
என் கோமகனை வழி பார்த்தால்
கண்டவுடன் சொல்லிவிடு