Wednesday, July 18, 2012

சித்திர பித்தன்


என்னைகொண்டே என்னைக் கிறுக்கும்
சித்திர பித்தன் நானாவேன்.

தன்னைகொண்டே தன்னை செதுக்கும்
உளி படும் கல்கியும் என் மனமாக.

கட்டிய வேடமும் கிட்டிய மேடையும்
என் உடைகளும் உலகமும் அதுவாக‌

எதற்காய் இட்டேன் இக்கோலம்
என்றே மறந்தேன் இந்நேரம்.

அரிதாரம் இட்டு அனுதினம் நடித்தேன்
பரிகாசம் பேசி எனக்குள் சிரித்தேன்.

அகத்தில் இருக்கும் அழுகையெல்லாம்
அழகாய் மறைத்தேன் அகிலத்திலே.

நகைத்து ரசிக்கும் நல்லாரின்
நாடகக் கோமாளி நானாவேன்
 

No comments:

Post a Comment